பொது இடத்தில் தண்டனை வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்
கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
கொழும்பு டார்லி வீதியில் ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரை பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த காரணத்திற்காகவே குறித்த இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த விமர்சனங்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களை பொலிஸார் தண்டிப்பது மற்றும் தண்டனை வழங்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்ற நிலையிலேயே இலங்கையிலும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Post a Comment