இரண்டு மாத மின்சார கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் தெரியுமா?
மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
எவ்வாறு எப்படியான தொகை இந்த 2 மாதங்களுக்கு வந்திருக்கும் என்கிற சந்தேகத்திற்கு இலங்கை மின்சார சபை பதில் வழங்கியுள்ளது.
இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதால் இலங்கை மின்சார சபையின் தலைவர் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, ஒரு மாதத்திற்கு முன்னைய மாதத்தின் கணக்கு, (பிப்ரவரி மாத கணக்கு) மார்ச் மாதத்தில் வருகிறது. ஏப்ரல் மாதத்தில் வருவது, அதன்போது இருக்க வேண்டிய பில்லின் தொகையில் இருந்து மார்ச் மாதத்தை கழித்து வரும் வகையில் தான் செய்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
அதாவது கடந்த பெப்ரவரி மாத பட்டியலில் இருந்த தொகையே மார்ச் மாத பட்டியலில் சேர்க்கப்படும்.
ஏப்ரல் மாத பட்டியலில் அத்தொகை கழிக்கப்பட்டு புதிய பட்டியல் பகிரப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Post a Comment