Header Ads

சிலாபத்தில் பெண் ஒருவரின் திடீர் உயிரிழப்பால் பெரும் பரபரப்பு

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றிருக்கிறது.

பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது பெண் இவ்வாறு அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றுக்கான பரிசோதனைக்காக இரத்த மாதிரியும் பெறப்பட்டது.

இதனிடையே அவர் திடீரென உயிரிழந்த செய்தி மருத்துவமனை முழுவதும் பரவியதை அடுத்து ஏனைய நோயாளர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு அமைதியின்மையும் ஏற்பட்டிருக்கிறது.

இறுதியில் அவரது இரத்தமாதிரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே மருத்துவமனை வழமைபோல இயங்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.