நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோன தொற்றாளர்கள் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்
கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகாரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 17 கொரோனா தொற்று உறுதியானவர்கள் இனங் கணப்பட்டுள்ளனர்.
அவர்களில் இரண்டு பேர் கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு 12 தோமஸ் ஒழுங்கை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் கொழும்பு - வாழைத்தோட்டம் - பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் எனவும் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
புறக்கோட்டை - வாழைத்தோட்;டம் பண்டாரநாயக்க மாவத்தை 146 இலக்க தோட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் என 25 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரி டப்ளிவ் கே சந்ரபால இதனை தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் 15க்கும் மேற்பட்ட நோயாளர்க்ள இனங் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, மேலும் 90 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுறுதியானவர்களில் மேலும் ஐந்து பேர்; குணமடைந்து நேற்றைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கொரேனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை. புனனை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 63 பேர் நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை நான்காயிரத்து 143 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment