Header Ads

முன்னாள் அமைச்சர் ரிஷாட் கைது செய்யப்படுவாரா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வழங்கியுள்ள பதில்

சாட்சியங்கள் மற்றும் காரணங்களின் அடிப்படையிலேயே CID யினர் விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஏதாவது நபர் தொடர்பில் சாட்சியங்கள், காரணங்கள் காணப்படுமாயின் மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளார் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான எவ்வித சான்றுகளும் காணப்படவில்லையா என , சமூகத்தில் அவ்வாறான கதைகள் காணப்படுவதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜாலிய சேனாரத்ன, "அவ்வாறான கருத்து சமூகத்தில் காணப்படலாம். ஆயினும் சாட்சியங்கள் மற்றும் காரணங்களின் அடிப்படையிலேயே CID யினர் விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஏதாவது நபர் தொடர்பில் சாட்சியங்கள், காரணங்கள் காணப்படுமாயின் மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கடந்த அரசில் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட ஒரு குழு மூன்று பேர் தொடர்பில் நடத்திய விசாரணை அறிக்கை தொடர்பிலும் அது எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பிலும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.