Header Ads

சற்றுமுன்னர் வௌியான செய்தி- கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் 24 நோயாளர்கள்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 24 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பபட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று (20) இனங்காணப்பட்ட அனைவரும் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 96 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 17 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அடையாளம் காணப்பட்ட குறித்த 17 பேரில் 15 பேர் கொழும்பு - வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள்.

No comments

Powered by Blogger.