28ம் திகதி தேர்தலா? எதிர்ப்பு தெரிவித்த ஆணைக்குழு உறுப்பினர் - மஹிந்த வௌியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அல்லது பிற்போடுவதற்கு யாரும் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தும் யோசனைக்கு தான் உடன்படப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாகவே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுத்தேர்தல் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர், அஞ்சல்மா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலரும் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Post a Comment