Header Ads

அதிவேக வீதி இன்று முதல் திறப்பு - திறக்கப்படும் நேர விபரம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை கட்டம் கட்டமாக திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


இதற்கமைய, கொட்டாவ தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை இன்று முதல் (20) மு.ப 7.00 மணி தொடக்கம் பி.ப 7.00 மணி வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையை கட்டுநாயக்க தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை நாளை மறுதினம் (22) முதல் திறக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை புகையிரதங்களில் தொழில்சார் அடையாள அட்டைகள், ஊரடங்கு அனுமதியட்டை மற்றும் புகையிரத பருவச்சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரமே பயணிக்க முடியுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு மாத்திரம் தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.