Header Ads

இந்த ஊரடங்கு சட்டம் சட்ட விரோதமானது - சுமந்திரனின் அதிரடிக் கருத்து

sumanthiran-comment-on-curfew

நாட்டில் சட்டரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்கிற பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.


நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராகிய பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வெறும் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டு இந்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்செய்ய முடியாது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு சட்டவலு இல்லை.

எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே அனைவரும் இந்த ஊரடங்குச் சட்ட அறிவிப்பிற்கு கீழ்ப்படிந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.