கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் ஒரே தடவையில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு?
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் ஒரே தடவையில் 24 பேருக்கு கொரோன தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று பிரதேசத்தில் உள்ள மௌலவி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை இன சகோதரியொருவர் தம் குடும்பம் சகிதம் இந்தியாவிற்கு புனிதப்பயணமாக தம்பதிவ சென்றுவிட்டு மார்ச் 12 திகதி நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் முதலில் கொரோனா தொற்று அந்தப் பெண்ணுக்கே ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் போன்ற சுகயீன நிலையை மறைத்து வந்துள்ள நிலையில், ஏப்ரல் 16ந் திகதி அவர் ஐ. டீ. எச். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கடுத்த நாள் 17ந் திகதி அவரது கணவரும் மகனும் உட்பட அதே தோட்டத்தில் வசிக்கும் இன்னும் 6 பேர் தொற்றுக்குள்ளானது தெரியவந்துள்ளது.
அவர்களைத் தொடர்ந்து 19ந் திகதி அவர்களது பக்கத்து வீடுகளி மேலும்10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அந்தத் தோட்டத்திலிருந்த அத்தனை குடும்பத்தினரையும் அவர்களின் நலன்கருதி பரிசோதனை சாவடிகளுக்கு இராணுவம் அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்போது அநதப் பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment