கொரானாவால் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோன ஏற்படுமா? WHO வௌியிட்டுள்ள தகவல்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் இந்த தொற்று ஏற்ப்படாது என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகவே குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைத்தல் சிறந்ததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
ஒருமுறை கொரோனா தாக்கி மீண்டவர்களை இரண்டாவது முறையாக அந்த வைரஸ் தாக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும், இரண்டாவது முறை வைரஸ் தாக்காத வகையில் உடலில் ஆன்ட்டிபாடிகள் இருக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment