Header Ads

கொரோனா முற்றாக ஒழியவில்லை - சுகாதாரப் பணிப்பாளர் இன்று தெரிவித்துள்ள விடயம்

எதிர்வரும் 11ஆம் திகதி ஊரடங்கைத் தளர்த்துவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். 


தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்று முற்றாக ஒழிந்துவிட்டது என்று யாரும் எண்ணிவிடக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட்டோம் என்பதே நிதர்சனம் எனவும் கூறினார்.

வைரஸ் தொற்றுநோய் சமூக பரவலாக மாறாத வகையில் தடுத்துள்ளதாக கூறும் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இதுவரை முன்னெடுத்த வைத்திய பரிசோதனைகளை இத்துடன் நிறுத்திக்கொள்ளாது தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும் அவர் கூறினார்.

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் ஆரோக்கியமான மட்டத்தை அடைந்துள்ளது.

நாடு இன்று ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்பது உறுதிப்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறான நிலையை அடைய நாம் கடுமையாக கடந்த காலங்களில் போராட வேண்டியிருந்தது.

ஏனைய நாடுகள் இன்றுவரையும் கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகி அதிலிருந்து மீள்வதில் கடும் சிரமங்களை அனுபவித்து வருகின்ற நிலையிலும் நாம் வெகு விரைவில் இந்த நெருக்கடியை சமாளித்து மக்களை பாதுகாத்துள்ளோம்.

No comments

Powered by Blogger.