Header Ads

புத்தரின் கொள்கைகளின் பின்பற்றுவது மிகவும் அவசியமானது - கனடா பிரதமர்

கௌதம புத்தரின் கொள்கைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.


பௌத்த மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று இந்த தடவை வெசாக் பௌர்ணமி தினத்தை மக்களினால் அனுஷ்டிக்க முடியாத ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

எனினும், தன்னலமற்ற சேவை மனப்பாங்கு மற்றவர்களுக்காக உதவுதல் போன்ற புத்தரின் கற்பிதங்கள் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய வாழ் மற்றும் உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து பௌத்தர்களுக்கும் இனிய அமைதியான வெசாக் பௌர்ணமி தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக ட்ரூடே தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.