Header Ads

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஒரு புதிய பொருளாதார திட்டத்தை உறுவாக்குவது மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதிக்கு கீழ் உள்ள விசேட பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பணிக்குழுவை வலுப்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மே 11 முதல் மீண்டும் வழமைநிலைக்கு கொண்டுவரப்படும் இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலணியுடன் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக உள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை புதிய வடிவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் 19 வைரஸை ஒழித்து எழுந்துள்ள நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் நோக்கங்களை அடைந்துகொள்ளும் வகையில் புதிய தொலை நோக்கின் அடிப்படையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி செயலணிக்கு பலம் உள்ளதாக அதன் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.