Header Ads

ராஜித சேனாரத்ன மருந்து மாபியாவில் ஈடுபட்டு கோடீஸ்வரர் ஆகியுள்ளார்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


ராஜித சேனாரத்ன மற்றும் அவரது நெருங்கிய சில உறவினர்கள், மருந்து மாபியாக்களில் ஈடுபட்டு கோடீஸ்வர்களாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ராஜித சேனாரத்ன தனது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு சகாதார அமைச்சில் நடத்திய மோசடிகள் குறித்து ஆராய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ராஜித சேனாரத்னவை தனிமைப்படுத்தலின் பின்னர் வௌியே விடாமல் அவருக்கு எதிராக விசாரணை செய்து அவருடைய சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.