Header Ads

கரு ஜயசூரிய கொடுப்பதை உண்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும்

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அழுது புலம்புவதை தவிர்த்து, கொடுப்பதை உண்டுவிட்டு வேறு வேலைகளை பார்த்துக்கொண்டு மேலும் 3 மாதங்களுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒதுங்கி இருப்பது காலத்திற்கு உகந்த செயல் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள பின்னணியில் நாட்டில் சபாநாயகர் ஒருவர் இல்லை.

இதனால், நாடாளுமன்றம் தொடர்பாக எந்த தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் முன்னாள் சபாநாயகருக்கு இல்லை.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி சம்பந்தமாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் எதிர்வரும் 4 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறும் சந்திப்பில், சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துக்கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.