ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே மாதம் 11ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகள் மே மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் உட்பட நாட்டின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க அரச மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் நிறுவனங்களின் தலைவர்கள் கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் அதிகாரிகள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் முன்னரைப் போன்று இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மீண்டும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டங்களில் மே மாதம் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 11 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment