Header Ads

மரணித்ததாக கூறப்படும் வடகொரிய அதிபர் உயிருடன் வந்து பொது நிகழ்வில் பங்கேற்றார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


அவர் தொடர்பில் பல்வேறு ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டுவரும் நிலையில், 20 நாட்களின் பின்னர் அவர் பொது வெளியில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத வடகொரியாவில் ஊடகங்கள் உள்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் கடந்த 12ம் திகதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் அதிபர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவரது நிலைமை என்ன என உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட கிம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், கிம் குறித்து கடந்த 20 நாட்களாக எந்த ஒரு தகவல்களும் கிடைக்காத நிலையில் அவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் புதிதாக அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலையை அதிபர் கிம் ஜாங் உன் நேற்று நேரில் வந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த நிகழ்ச்சி நடைபெற்றதையோ, அதில் அதிபர் கிம் பங்கேற்றதையோ உறுதிபடுத்தும் விதமாக எந்த ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவையோ வடகொரிய அரசு செய்தி நிறுவனம் ஆதாரமாக வெளியிடவில்லை.

No comments

Powered by Blogger.