Header Ads

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவருக்கும் கொரோனா இல்லை

முல்லைத்தீவில் விமானப் படையின் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த கொழும்பைச் சேர்ந்த இருவரது மரணத்திற்குமான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.


80 வயதைக் கடந்த கொழும்பு குணசிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முள்ளியவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

இவர்களது மரணத்திற்கான காரணம் கொரோனா வைரஸா என்ற சந்தேகம் நிலவியது.

எனினும் இதுகுறித்து இன்று சனிக்கிழமை காலை கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சாதாரண மரணமே இது என்றும், கொரோனா வைரஸினால் அவர்கள் பீடிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் கூறியிருக்கின்றார்.

இறந்தவர்கள் இருவரும் கொரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை என வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் 80 வயதை கடந்தவர்கள் என்றும் முள்ளியவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.