Header Ads

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 216 சட்டத்தரணிகள் கையெழுத்திட்டுள்ள கடிதம்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதாகியுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்காக தலையீடுகளை செய்ய வேண்டாம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸவுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.


216 சட்டத்தரணிகள் கையெழுத்துடன் இந்தக் கடிதத்தை வழங்கியிருக்கின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் புத்தளத்தில் வைத்து அண்மையில் கைதாகிய சட்டத்தரணி ஹிஜாஸிற்கும் ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய தீவிரவாத அமைப்பு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சில சந்தேக நபர்களுக்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் அவருக்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் எவராவது நீதிமன்றில் ஆஜராவதோ, வேறு உதவிகள் செய்வதோ கூடாது என்று தெரிவிக்கும் கடிதமே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.