அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் தொர்பான விளக்கம்
அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாகரீகமான முறையில் சாதாரண ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்க முடியும் என சுதேச விவகார, உள்ளுராட்சி மன்ற, மாகாணசபைகள் அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை கடமைக்கு அழைக்கும் போது மிகவும் பாதுகாப்பான நடைமுறையை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் போது பணியாளர்கள் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment