Header Ads

சிகை அலங்கார நிலையங்களை திறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

ஊரடங்கு உத்தரவு தளர்தப்படும் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


எவ்வாறாயினும் குறித்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சினால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடி வெட்டுதல், தலை முடிக்கு நிறமூட்டுதல், கால் கை நகங்களை அழகுபடுத்தல், கால், கைகளிலுள்ள உரோமத்தை நீக்குதல் (cutting/trimming of hair, dying of hair, manicure/pedicure and waxing of arms and legs) ஆகியவற்றுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என புதிய நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களது சிகையலங்கார நிலையங்கள் அல்லது, அழகுக்கலை நிலையங்களை அவற்றின் உரிமையாளரோ, முகாமைத்துவமோ திறக்க விரும்பினால், குறித்த பகுதியிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் (MOH) அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு,  அவர்களினால் சரி பார்க்கப்பட்டு அதற்கான  விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படும்.

அழகு நிலையங்களை திறப்பதற்கு முன் பிரதேசத்தில் உள்ள சுகாதார சேவைகள் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள www.health.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.

No comments

Powered by Blogger.