சஹ்ரான் உட்பட குண்டுதாரிகளின் மனைவிமார் தங்கியிருந்த விடுதி
காத்தான்குடி - பாலமுனை - ஹர்ப்பலா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், நடத்தப்பட்ட போதனைகளில் ஏப்ரல் 21 தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹஸீம் உள்ளிட்ட குண்டுதாரிகளின் மனைவியர்கள் பங்கேற்றிருந்ததாக பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சஹ்ரான் ஹாஸிம் தொடர்பிலும், அவரின் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பிலும், பெண்களுக்கு போதனை நடத்தப்பட்ட குறித்த சுற்றுலா விடுதி நேற்றைய தினம் பாதுகாப்பு தரப்பினரால் கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த விடுதி கண்டறியப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் சஹ்ரானும், அவரின் சகோதரனும் குறித்த விடுதியில் தங்குவதற்காக சென்றிருந்தனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சுற்றுலா விடுதியின் தற்போதைய உரிமையாளரிடமும், முன்னாள் உரிமையாளரிடமும் குற்றப் புலனாய்லு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Post a Comment