Header Ads

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் வீட்டில் இருந்து வௌியே செல்வோர்...

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலகட்டங்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் செல்ல வேண்டும் என பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


அவ்வாறு குறித்த விடயத்தை பின்பற்றாதவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாளை மறுதினம் அதகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்தப்படவுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக வாரத்தின் 5 நாட்களுக்கு மக்களுக்கு அடையாள அட்டையின் பிரகாரம் வெளியேற முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.