குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சக பணியாளர்கள்
குருநாகல் மருத்துவமனையின் பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை செயற்படுத்தாவிட்டால் தாம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குருநாகல் மருத்துவமனையை பாதுகாக்கும் அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் வீரபண்டார கொரோனா தொற்று விடயம் தொடர்பில் சரியான முறையில் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 04ம் திகதி வைத்தியசாலையின் பணியாளர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அவரை வைத்தியசாலையில் இருந்து நீக்கும் வரை அத்தியவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும் அவருக்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன கூறினார்.

Post a Comment