Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஆளானா மற்றொருவர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 


'ஐடிஎச்'இல் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 755ஆக அதிகரித்துள்ளது.

 அத்துடன், 197 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 550பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

No comments

Powered by Blogger.