சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு - ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்தி
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு நாளை தொடக்கம் மீள் அறிவித்தல் வரை அதிகாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மக்களை வாழ்க்கை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டவாறு நாளை (11) திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

Post a Comment