Header Ads

ஈஸ்டர் தாக்குதல்; கல்பிட்டியில் நேற்று கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பல ஆவணங்கள் மீட்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (03) கல்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபரின் அலுவலகத்தில் இருந்து புத்தகங்கள் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சஹ்ரான் ஹாசிம் மற்றும் முஹம்மத் இப்ராஹீமின் புதல்வர்கள் இருவர் கருத்தரங்கு நடத்திய அமைப்பின் பொறுப்பாளர் கற்பிட்டி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் முக்கியஸ்தரான இவர், ஆயுதம் மற்றும் இதர பயிற்சிகளை ஸஹ்ரான் ஹஷீமிடம் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசார் நகர் பகுதியில் குறித்த நிறுவனம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அமைப்பின் அலுவலகம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போதே சந்தேகமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.