Header Ads

கொழும்பில் உயிரிழந்த முஸ்லிம் இளைஞரின் உடல் நான்கு நாட்களின் பின் இன்று அடக்கம்

கொழும்பில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த (வயது 35) பிர்தௌஸ் என்ற இளைஞருடைய சடலம், நான்கு நாட்களின் பின்னர் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


சடலத்தை தகனம் செய்ய முயற்சித்த நிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை நடாத்துமாறு கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி அஷ்ரப் ரூமி உத்தரவிட்டிருந்ததுக்கு அமைய பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த மரணம் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என, அவரது குடும்பத்தவர்கள் தொடர்ந்து ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையிலேயே பிர்தௌசின் சடலம், இன்று சனிக்கிழமை (09) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் நான்கு நாட்களின் பின்னர் இன்று அடக்கம் செய்யப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தனது முகப்புத்தக பக்கத்தில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.