Header Ads

இலங்கையில் புத்தர் சிலைகளை எரித்த ஓமல்பே சோபித்த தேரர்

இலங்கையில் முதற்தடவையாக இன்று சனிக்கிழமை புத்தர் சிலைகள் தீயில் சுட்டு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.


இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிலையத்தில் இலங்கையின் பிரதான சங்கத் தலைவராகிய கலாநிதி ஓமல்பே சோபித்த தேரரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பல வீடுகளிலும், தெருக்கள் ஓரமாக உள்ள அரச மரத்தடிகளிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தர் சிலைகள் இவ்வாறு சேகரிக்கப்பட்டு தீயில் சுட்டு எரிக்கப்பட்டன.

இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஓமல்பே சோபித்த தேரர், இவ்வாறு புத்தர் சிலைகளை மக்கள் இல்லாத இடங்களில், தெருக்கள் ஓரமாக மரத்தடிகளில் கைவிடப்பட்டுச் செல்வதால் பௌத்த மதத்திற்கே பேரவமானம் ஏற்படுவதாகக் கவலை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.