Header Ads

நாளை தளர்த்தப்படுகின்ற ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பு

நாடு முழுவதும் தற்சமயம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவதற்கான வேலைத்திட்டம் நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் நாளை முதல் எதிர்வரும் (27) வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.