Header Ads

இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் இஸ்ரேலில் மர்ம மரணம்

இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேலின் டெல் அவிவ் இல் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சீனத் தூதுவர்.

57 வயதுடைய டு வெய் (Du Wei) இஸ்ரேலுக்கான சீனத் தூதுவராக கடந்த பெப்ரவரி மாதம் நியமனம் பெற்றுள்ளார்.

அவர் நித்திரையிலேயே உயிரிழந்து கிடப்பதாகவும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

திருமணமான அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் சினாவின் பின்னடைவு தொடர்பில் பேசியிருந்ததுடன், சீனாவில் இஸ்ரேலின் முதலீடு தொடர்பிலும் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் மர்மமான முறையில் இஸ்ரேலில் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.