Header Ads

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் கணிப்பானை (Calculator) உபயோகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கணக்கியல்,பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக இந்த கணிப்பானை உபயோகிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பரீட்சார்த்திகளுக்கு கணக்கிடு கருவிகளை வழங்குவது தொடர்பாக கல்வியல் நிபுணர்களுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கணக்காய்வாளர் சேவைக்கான பகிரங்க போட்டி பரீட்சையில் தோற்றியவர்களுக்கு முதல் முறையாக கணக்கிடு கருவிகள் வழங்கப்பட்டன.

உயர்தரப் பரீட்சையின் போது சாதாரண ரக கணக்கிடு கருவிகளை மாத்திரமே பயன்படுத்த இடமளிக்கப்படும் என்பதுடன் அதனை பரீட்சாத்திகள் எடுத்து வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.