Header Ads

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றொரு சிறுவன்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில் இறுதியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.


இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன் என்பவரின் 3 வயது மகன் சாய் வர்தன்.

தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்ற போது, தவறுதலாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் 25 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மண் சரிவு ஏற்பட்டதால், குழந்தை கீழிறங்கியது.

இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றன.

இந்நிலையில் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குறித்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு குழந்தை சுவாசிக்க ஒக்சிஜன் செலுத்தப்பட்டது.

இறுதியில் சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டதாக மேடக் மாவட்ட பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.