Header Ads

எதிர்வரும் 31ம் திகதி மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜுன் 1ம் திகதி திங்கட் கிழமை முதல் ஜுன் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும்.

பின்னர் ஜுன் 4ம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

ஜுன் 6ம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.