இன்று காலை ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது 99 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற அந்தக் கட்டியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் யாப்பின் அடிப்படையில் வேறு ஒரு அரசியல் கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை கையளிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் முழு அனுமதியையும் பெற வேண்டும் என்ற போதும் குறித்த உறுப்பினர்கள் எவரும் எவ்வித அனுமதியையும் எழுத்துமூலம் பெற்றிருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ள நபர்களுக்கிடையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.
அவர்களுக்கு எழுத்துமூலம் விளக்கமளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment