Header Ads

சஜித்துடன் இணைந்து கொண்டவர்களுக்கு விரைவில் முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுப் பிரிந்து வேறு அரசியல் கட்சிகள் ஊடாக பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கும் உறுப்பினர்கள் குறித்து மிகவிரைவில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.


இதுகுறித்து இன்று புதன்கிழமை அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இவ்வாறு விலகி வேறு கட்சிகளில் செயற்பட்டு வருகின்ற உறுப்பினர்கள் தங்களது எண்ணங்களையும், அதற்கான அவசியத்தையும் எழுத்துமூலமோ அல்லது வாய்மூல அறிக்கையிடலோ கட்சியின் வேட்புமனுக் குழுவிடம் தெரிவிக்கவில்லை என்று குறித்த அறிக்கையின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

கட்சி யாப்பின் பிரகாரம், வேறு கட்சிகளில் சென்று வேட்புமனு கையளிப்பதாயின் அதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்புமனு குழு அனுமதிபெறவேண்டும்.

எனினும் அந்த அனுமதியை குறித்த உறுப்பினர்கள் பெறவில்லை. ஆகவே அவர்கள் குறித்த முடிவினை விரைவில் கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது பேசி எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.