Header Ads

சற்று முன்னர்...மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழப்பு

மாளிகாவத்தை பிரதேசத்தில் சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


மேலும் நான்கு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட நபர் ஒருவரினால் அப்பிரதேசத்தில் ஒரு தொகை பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது, அங்கு அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பணம் பகிர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னிணைப்பு 


சம்பவம் தொடர்பில் பணம் பகிர்ந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸச ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.