Header Ads

பாரிய சூராவளியாக உருவெடுக்கும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது.


தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த அம்பன் (AMPHAN) சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் சில இடங்களில் 150மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில்150மி.மீ க்கும்அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.