Header Ads

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அம்பலமாகியுள்ள மற்றுமொரு தகவல்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக காத்தான்குடியில் நடந்த மோட்டார் சைக்கிளில் குண்டுவெடிப்பு முன்முயற்சி குறித்தும் அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் தெரியப்படுத்தியதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முக்கிய அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கையில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் ஏப்ரல் 17ஆம் திகதியில் காத்தான்குடியில் இப்படியான முயற்சியொன்று இடம்பெற்றிருப்பது குறித்து காணி உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தொலைந்துபோன அடையாள அட்டை ஒன்றைப் பெற்று மோட்டார் சைக்கிள் கொள்வனவு முதற்கொண்டு இடம்பெற்றிருக்கும் சகல தகவல்களையும் பொலிஸ்மா அதிபரிடம் பாரப்படுத்தியிருந்ததாகவும் அந்த அதிகாரி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை சஹ்ரானின் அடிப்படைவாத பிரச்சாரங்கள் சம்பந்தமாக பல்வேறு தடவைகள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அததுடன் சஹ்ரான் சமூக வலைத்தலங்கள் ஊடாக அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு, வெளிநாட்டில் உள்ளவர்களிடம் நிதி திரட்டுவதாகவும், அந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றும் சஹ்ரான் கைது செய்யப்பட வேண்டிய நபர் என்றும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளமையும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.