Header Ads

குருணாகல வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக விசாரணை - உடனடி இடமாற்றம்

சுகாதார அமைச்சு குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்துள்ளது.


குருநாகல் பிரதான வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் சரத் வீர பண்டார  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் கையொப்பிடமிட்ட எழுத்து மூலம்  அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பதில் பணிப்பாளராக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் வீரபண்டார கொரோனா தொற்று விடயம் தொடர்பில் சரியான முறையில் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அவரது  அனைத்து  செயற்பாட்டு நடவடிக்கைகளிலும்  கணிசமானவர்கள் அவருக்கு எதிராக செயற்பட்டுள்ளனர்.

இந்த முறைபாடு தொடர்பாக விசாரணை மேற் கொள்ளுவதற்காக இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.