Header Ads

கொரோனா இன்றி முஸ்லிம் தாயின் உடல் எரிப்பு - மனோ கணேசன் தெரிவித்துள்ள விடயம்

கொரொனாவினால் மரணிக்காத, கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கை தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையனாக வேதனையடைகிறேன் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.


தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தை கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக நிற்கிறேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மோதரை பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான பாத்திமா றினோசா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாக தெரிவித்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.