கைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளில் இருந்து பெயர்களை நீக்குவதாக தெரிவித்து கையடக்கத் தொலைபேசியூடான பணப் பரிமாற்ற முறைமையை பயன்படுத்தி கப்பம் பெறப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் ஷானிகா ஷ்ரியாநந்த தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மோசடிக்காரர்களினால் 25,000 – 50,000 ரூபா வரை கப்பம் கோரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் விசாரணைகளில் இருந்து பெயர்களை நீக்குவதாக தெரிவித்து, அச்சுறுத்தி கப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் வருமாயின் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment