Header Ads

இன்று பிரதமர் மஹிந்தவை சந்திக்க செல்கின்றார் சுமந்திரன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தனக்கு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் மற்றும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட சகல காரணிகளையும் தயார்படுத்தியிருந்த சுமந்திரன் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

எனினும் நேற்றைய தினம் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்காத பிரதமர் இன்றைய தினம் இரவு 7 மணிக்கு சந்திப்பிற்கான நேரத்தை வழங்கியுள்ளார்.

அதற்கமைய எம்.எ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிரதமரை சந்திக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.