Header Ads

இன்று பல பிரதேசங்களுக்கு 10 மணி நேர நீர் வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (12) 10 மணித்தியால நீர்வெட்டு அமல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை-கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருப்பப் பணிகள் காரணமாக, மு.ப 8.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, நீர் வழங்கல் சபையின் களுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் வாத்துவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, மொரன்துடுவ, கட்டுக்குருந்த, நாகொட, தொடங்கொட, பிலமினாவத்த, தர்காநகர், பெந்தொட்ட ஆகிய பகுதிகளுக்கே, நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.