அலி சப்ரிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிங்கள அமைப்புக்கள்
அல் ஜசீரா சர்வதேர ஊடக சேவையில் இனவாத கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரிக்கு எதிராக சிங்களே அமைப்பு மற்றும் புதிய சிங்களே அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளன.
இன்று கொழும்பில் இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் சந்திப்புகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் இணைந்து ரிஷத் பதியுதீன் போன்ற அடிப்படைவாதிகளை உருவாக்கியதாகவும், தற்போது மற்றொரு ரிஷாத் பதியுதீனை உருவாக்கும் முயற்சியா இது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இது வரை சிங்கள தீவிரவாத அமைப்புகளால் ஓரளவுக்கு போற்றப்பட்டு வந்த நிலையில் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிங்ஹலே அமைப்பு அவரை 'தக்கடியா' என வர்ணித்துள்ளது.
அல்-ஜசீரா செய்தி நிறுவனத்துக்கு, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அலிசப்ரி, விஞ்ஞான ரீதியில் அவ்வாறு ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து ஆட்சேபிக்க எதுவும் இல்லை (ஆனால் அவ்வாறு இல்லை) என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
இப்பின்னணியிலேயே அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள சிங்ஹலே அமைப்பு அலி சப்ரியை மோசமான முறையில் இனவாத அடிப்படையில் தாக்கிப் பேசியுள்ளதுடன் அவர் குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ளது.

Post a Comment