Header Ads

சற்றுமுன்னர் ஆரம்பமானது பிரதமர் தலைமையிலான விஷேட கூட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட கூட்டம், அலரிமாளிகையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்திப்பில் கலந்துக்கொள்வதாக முன்னதாக அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அதனை புறக்கணிக்கவுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

அது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குறித்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

குறித்த கூட்டத்தில் எந்தவிதமான அர்த்தபூர்மான உரையாடலும் இடம்பெற மாட்டாது என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன தீர்மானித்துள்ளன.

எவ்வாறிருப்பினும், குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.