Header Ads

கல்பிட்டியில் சஹ்ரான் ஹாசிம் தீவிரவாத கருத்தரங்கு நடத்திய அமைப்பின் பொறுப்பாளர் கைது

சஹ்ரான் ஹாசிம் மற்றும் முஹம்மத் இப்ராஹீமின் புதல்வர்கள் இருவர் கருத்தரங்கு நடத்திய அமைப்பின் பொறுப்பாளர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


இன்று மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் முக்கியஸ்தரான இவர், ஆயுதம் மற்றும் இதர பயிற்சிகளை ஸஹ்ரான் ஹஷீமிடம் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசார் நகர் பகுதியில் குறித்த நிறுவனம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சஹரான் ஹசீமை தவிர்ந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவர் குறித்த தீவிரவாத சொற்பொழிவு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முந்தைய செய்தியை வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

No comments

Powered by Blogger.