Header Ads

DIG அஜித் ரோஹண சட்டத்தை மீறினாரா? அவரது மகள் தெரிவித்துள்ள விடயம்

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள் பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு அவரே சமூக ஊடகங்களில் பதிலளித்திருக்கின்றார்.

கல்விக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பிய தனது மகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பாமல் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுக்க அனுமதி வழங்கியதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்வாறு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அஜித் ரோஹணவின் புதல்வி தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் பெலாறஸ் நாட்டு பல்கலைகழகத்தில் கல்வி கற்பதாகவும் அங்கு 400 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இறுதியாண்டு பரீட்சை நிறைவடைந்ததன் பின்னரே தான் இலங்கைக்கு வருகை தந்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவும் ஏற்கனவே நிராகரித்திருந்தார்.

No comments

Powered by Blogger.