Header Ads

IDH வைத்தியசாலைக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கொரோணா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு பிரதானமாக சிகிச்சை வழங்கப்படும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு Galle Catters நிறுவனத்தினால் இன்று (21) வியாழக்கிழமை மதிய போசனம் வழங்கப்பட்டது.


நோன்பு பெருநாளை முன்னிட்டு குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 500 பேருக்கு இந்த மதிய போசனம் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் Galle Catters நிறுவனத்தின் தலைவர் சப்றி ஹாஜி, ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க, வைத்திய அதிகாரி அசாட் சமட் மற்றும் சட்டத்தரணி ரமீஷ் பசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்





No comments

Powered by Blogger.